ED Raid pt desk
தமிழ்நாடு

கோவை: கார் ஷோரூம் உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை - காரணம் என்ன?

கோவையில் கார் ஷோரூம் உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

webteam

செய்தியாளர்: ஐஷ்வர்யா

கோவை ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அனீஸ். இவர் கோவை திருச்சி சாலையில் கார் ஷோரூம் வைத்துள்ளார். சவுரிப்பாளையம் பகுதியில் கார் சர்வீஸ் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை மூன்று கார்களில் வந்த 15க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரது வீட்டில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ed

சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான புகார் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மற்றொருபக்கம் சென்னையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வீடு மற்றும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரருக்குச் சொந்தமான இடத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த 3 சோதனைகளுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.