முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் pt desk
தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில், இன்று அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

PT WEB

செய்தியாளர்: R.முருகேசன்

2011 - 2016 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். இவர், தனது பதவியை பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுத்த புகாரை அடுத்து கடந்த செப்டம்பர் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை இவர் மீது வழக்குப் பதிவு செய்தது.

ed

தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ள வைத்திலிங்கத்திற்கு, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விடுதியில் D Itself-ன் 4-வது மாடியில் F என்ற அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் அவரது அண்ணன் மகன்கள் மற்றும் அவரது உறவினர்கள் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை முதல் அமலாகத்துறை அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் சென்னை தியாகராய நகர், கிழக்கு கடற்கரை சாலை, தஞ்சாவூரில் உள்ள வைத்திலிங்கத்தின் வீடு ஆகியவை உட்பட ஆறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.