தமிழ்நாடு

‌கடல்சீற்றம் எதிரொலி: 5 ஆவது நாளாக கரையில் நிற்கும் படகுகள்

‌கடல்சீற்றம் எதிரொலி: 5 ஆவது நாளாக கரையில் நிற்கும் படகுகள்

webteam

நாகை வேதாரண்யம் கடற்பகுதியில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் 5 ஆவது நாளாக கடலுக்கு செல்லாமல் இருப்பதால், வாழ்வாதாராம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

வேதாரண்யம் கடற்பகுதியில் கடந்த சில நாட்களாக, கடல் சீற்றத்தோடு காணப்படுவதோடு பலத்த காற்றும் வீசி வருகிறது. இதனால் ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் போன்ற கிராமங்களைச் சேர்ந்த 5000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அதனால் 800க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

தொடர்ந்து ஐந்து நாட்களாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாளொன்றுக்கு 25 லட்சம் ரூபாய்க்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தங்களுக்கு வழங்க வேண்டிய மழைக்கால நிவா‌ரணம் கூட முறையாக வழங்கப்படவில்லை என மீனவர்கள் புகார் கூறி உள்ளனர். எனவே தங்களின் கோரிக்கைகளை ஏற்று, அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.