பழைய சாதம் சாப்பிடுபவர்களுக்கு குடல் அழற்சி என்ற நோய் ஏற்படுவது இல்லை என சுகாதாரத்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.
சென்னையில் குடல் அழற்சி பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை சார்பில் 60 நோயாளிகளிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பழைய சாதம் சாப்பிடுபவர்களுக்கு குடல் அழற்சி மற்றும் அல்சர் ஏற்படாது என தெரியவருவதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு குடல் அழற்சி பாதிப்புக்கு ஓன்று அல்லது இருவர் மட்டுமே சிகிச்சை பெற்று வந்துள்ளனர். ஆனால், தற்போது நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று பேர் வரை குடல் அழற்சியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.