தமிழ்நாடு

ஈஸ்டர் பண்டிகை : பிரியாணி கடைகளில் குவிந்த மக்கள்

ஈஸ்டர் பண்டிகை : பிரியாணி கடைகளில் குவிந்த மக்கள்

webteam

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் உள்ள கடைகளில் பிரியாணி வாங்குவதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் மக்கள், ஊரடங்கு உத்தரவால், தேவாலயங்களுக்கு செல்ல முடியாத நிலையில், வீட்டிலேயே கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், பண்டிகை தினத்தை முன்னிட்டு சென்னையில் பல்வேறு பிரியாணி கடைகளில், பிரியாணி வாங்குவதற்காக மக்கள் குவிந்திருந்தனர்.

கொரோனா முன்னெச்சரிக்கையாக, மக்கள் அனைவரும் தனி மனித இடைவெளியை கடைபிடித்திருந்தனர். கையுறை மற்றும் முகக்கவசம் அணிந்து, அரசாங்கம் தெரிவிக்கும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றியே உணவு தயாரிப்பதாக, கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆன்லைன் மூலமாகவும் ஏராளமான மக்கள் பிரியாணியை ஆர்டர் செய்திருந்தனர்.

முன்னதாக, தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000-ஐ நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.