தமிழ்நாடு

இந்த ஆண்டு இறுதிக்குள் நிலநடுக்கம், சுனாமி: வைரலாகும் செய்தி உண்மையா?

இந்த ஆண்டு இறுதிக்குள் நிலநடுக்கம், சுனாமி: வைரலாகும் செய்தி உண்மையா?

webteam

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் நிலநடுக்கமும் சுனாமியும் வரும் என சமூக வலைதளங்களில் ஒரு கடிதம் வைரலாகி வருகிறது.

2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் மிகப்பெரிய நிலநடுக்கம் இந்தியாவில் நிகழ இருப்பதாகவும் சுனாமி தாக்கும் எனவும் கேரளாவை சேர்ந்த இ.கே.ஆய்வகம் பிரதமருக்கு எழுதிய எச்சரிக்கை கடிதம் அது. ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என வைரலாகி வரும் இக்கடிதம் பொதுமக்களை பீதியடைய வைத்துள்ளது. நிலநடுக்கத்தை யாராலும் முன்கூட்டியே சொல்ல முடியாது என்றும் அதிகாரபூர்வமற்ற தகவலை நம்பி மக்கள் அச்சப்பட வேண்டாம் புவியியல் துறையை சேர்ந்தவர்கள் இன்றும் கூறுகின்றனர்.

பூமியில் உள்ள நிலதட்டுகள் மோதிக்கொள்வதாலேயே நிலநடுக்கம் ஏற்படுகிறது. இந்தியாவின் நிலப்பரப்பை பார்க்கும்போது தமிழகம் மற்றும் தென் மாநிலங்கள் நிலதட்டுகளின் எல்லையில் அமைந்திருப்பதால் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு குறைவு என்றும் நிலநடுக்கம் ஏற்பட்டால் இமயமலைபகுதிகள், காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களே அதிகம் பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கின்றனர்.

இதுபோன்ற கடிதங்கள் யூகத்தின் அடிப்படையிலானது. ஆதாரமில்லாமல் மக்கள் எதையும் நம்பவேண்டாம் என்பதே அறிவிலாளர்களின் கருத்து.