தமிழ்நாடு

"ரூ.100 கொடுத்தால் இ-பதிவு சான்று" - 'புதிய தலைமுறை' கள ஆய்வில் அம்பலம்

"ரூ.100 கொடுத்தால் இ-பதிவு சான்று" - 'புதிய தலைமுறை' கள ஆய்வில் அம்பலம்

EllusamyKarthik

பொதுமுடக்க காலத்தில் பயணிப்பதற்கு தனியார் முகவர்கள், போலியான ஆவணங்கள் மூலம் இ-பதிவு செய்து கொடுத்து, பொதுமக்களிடம் பணம் பறிப்பது புதிய தலைமுறையின் கள ஆய்வில் அம்பலமாகியுள்ளது.

தமிழகத்தில் பொதுமுடக்கம் அமலில் இருப்பதால், அத்தியாவசிய தேவைக்குச் செல்வோர், இ-பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பலர் இதனை தவறாகப் பயன்படுத்தி, இ-பதிவு செய்கின்றனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இணையதள மையம் நடத்திவரும் இளைஞர்கள் சிலர், ஆதார் எண்ணை அளித்தால் உடனடியாக இ-பாஸ் பெற்றுக்கொடுக்கப்படும் என விளம்பரம் செய்திருந்தனர். 

இதுகுறித்து கள ஆய்வு செய்ய புதிய தலைமுறை, விளம்பரத்தில் கொடுக்கப்பட்ட எண்ணை தொடர்பு கொண்டது. ஆதார் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்த அந்த நபர், சிறிது நேரத்தில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து இ-பாஸ் அனுப்பினார். ஒரு இ-பதிவுக்கு 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவசர மற்றும் அத்தியாவசியமாக பயணம் செய்வோரின் வசதிக்காக உள்ள இ-பதிவு நடைமுறைகளை சிலர் தவறாக பயன்படுத்தி, பணம் பறிப்பது அம்பலமாகியுள்ளது.