கோடை விடுமுறையையொட்டி ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தநிலையில், சுற்றுச்சூழல் பாதிப்பை கவனத்தல் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் நடைமுறை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தில் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவது குறைக்கப்படுவதுடன், சுற்றுலா வருவோரும் மன நிம்மதியுடன் தங்களது விடுமுறையை கழிக்க முடியும் என சுற்றுலா பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மே 7ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவு கிடைக்க பின்னர் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் விரைவில் ‘இ-பாஸ் பெறுவதற்கான வழிகாட்டு நடைமுறைகள் வெளியிடப்படும்’ என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.