ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அஞ்சல் அட்டைகள் அனுப்பும் ஆர்ப்பாட்டம் PT Web
தமிழ்நாடு

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு 1000 அஞ்சல் அட்டைகள் அனுப்பும் ஆர்ப்பாட்டம்

தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து திராவிடநல் திருநாடு எனும் வரியை நீக்கி பாடப்பட்டதை கண்டித்து, அஞ்சல் அட்டையில் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்று எழுதி ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் ஆர்ப்பாட்டம்

PT WEB

செய்தியாளர்: ராஜ்குமார்

டி.டி தமிழ் இந்திக் கொண்டாட்ட நிகழ்ச்சியில், தமிழ்நாடே கொதித்தெழும் வகையில் தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து திராவிடநல் திருநாடு எனும் வரியை நீக்கி பாடப்பட்டதை கண்டித்து சென்னை ராயப்பேட்டையில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு 1000 அஞ்சல் அனுப்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அஞ்சல் அட்டைகள் அனுப்பும் ஆர்ப்பாட்டம்

இதில் 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அஞ்சல் அட்டையில் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்று எழுதி ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைத்தும் தமிழ்நாடு ஆளுநர் உடனடியாக வெளியேற வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மேலும், இன்றைய தினம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் திருநாடு எனும் வரியை நீக்கி பாடப்பட்டதை கண்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு 20,000 அஞ்சல் அனுப்பும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் விடுதலைக் கழகம் நிர்வாகி உமாபதி, “ஆளுநர் ரவி நேற்று திட்டமிட்டு தமிழ்த்தாய் வாழ்த்தின் திராவிடநல் திருநாடு எனும் வார்த்தையை விட்டுவிட்டு பாடி இருக்கிறார், ஒரு மாநிலத்தின் பாடல் பாடும் பொழுது திட்டமிட்டு பாடல் பாடியிருக்கிறார்.

ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அஞ்சல் அட்டைகள் அனுப்பும் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முதல்வர் அதை கண்டித்து உடனடியாக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். தமிழ்நாடு முழுக்க இன்று திராவிடர் விடுதலை கழகம் சார்பாக தமிழ்நாடு ஆளுநருக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட அஞ்சல் அட்டைகள் அனுப்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானங்களை ஆளுநர் மதிப்பதில்லை, தமிழ்நாடு என்ற வார்த்தையை புறக்கணித்து தமிழகம் என்று படிக்கிறார். அண்ணா, பெரியார், காமராஜர் பெயரை புறக்கணிக்கிறார்

ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அனுப்பப்பட்ட அஞ்சல் அட்டைகள்

தமிழ்நாட்டின் உரிமைகளை தமிழ்நாட்டின் தீர்மானங்களை கிடப்பில் போட்டு அவமதிக்கிறார். தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளையும் தமிழர்களின் உணர்வுகளையும் மதிக்காத ஆளுநரை உடனடியாக திரும்ப பெற வேண்டும். ஆளுநர் இந்த போக்கை கைவிட வேண்டும். இல்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும்” என தெரிவித்தார்.