தமிழ்நாடு

குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா கோலாகல தொடக்கம்

Rasus

மைசூருக்கு அடுத்தபடியாக பிரசித்திபெற்ற குலசேகரபட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

பத்து நாட்கள் நடைபெறும் தசரா விழாவையொட்டி, இன்று காலை கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. குலசேகரப்பட்டினம் தசரா விழாவில், காப்புக்கட்டி விரதமிருந்து தெய்வ வடிவங்கள், விலங்கு உருவங்களுடன் பக்தர்கள் வேடமிட்டு நகர் முழுவதும் ஊர்வலமாக வருவது வழக்கம். தனித்தனியாகவும், குழுவாகவும் வேடமிட்டு பக்தர்கள் வலம் வருவர். பின்னர் தசரா திருவிழாவின் நிறைவு நாளில் குலசை முத்தாரம்மன் மகிஷா சூரணை வதம் செய்வார். பின்னர் பக்தர்கள் தங்களின் காப்புகளை அறுப்பர்.

காப்புக்கட்டு நிகழ்வில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.