தமிழ்நாட்டிலிருந்து அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்களை கடத்துவதைத் தடுக்க தனிச் சட்டம் இல்லை என்று கனிமம் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமைச்சர், பர்கூர் அருகே டாமின் நிறுவனம் சார்பில் நடத்தப்படும் கிரானைட் கற்கள் மெருகூட்டும் தொழிற்சாலையில் ஆய்வு நடத்தினார். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கனிமம் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்காமல் மூடப்பட்டுள்ள கிரானைட் குவாரிகள் விரைவில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் கூறினார்.