துரை தயாநிதி pt web
தமிழ்நாடு

வேலூர்: மருத்துவமனையில் இருந்து துரை தயாநிதி டிஸ்சார்ஜ்!

வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

PT WEB

உடல் நலக்குறைவு காரணமாக வேலூர் சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் இருந்து வேலூர் சி.எம்.சி தனியார் மருத்துவமனைக்கு உயர் ரக சிகிச்சைக்காக மாற்றப்பட்டு, சி.எம்.சி மருத்துவமனையின் "A" வார்டில் கடந்த 6 மாதங்களாக தொடர் பிசியோதெரபி சிகிச்சை பெற்று வந்தார்.

துரை தயாநிதி

இந்நிலையில் உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து. மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

துரை தயாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, இரண்டு முறை தமிழக முதல்வர் மு க ஸ்டாலினும் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், சபரீசன், MP கனிமொழி ஆகியோர் வந்து நேரில் பார்த்து நலம் விசாரித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக துரை தயாநிதி மருத்துவமனையிலிருந்து புறப்பட்டபோது, அங்கிருந்தவர்கள் செய்தியாளர்கள் வீடியோ எடுத்ததை ஆவேசமாகத் தடுக்க முயன்றனர்.