மழை pt web
தமிழ்நாடு

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நான்கு மாவட்டங்களிலும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

PT WEB

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கடலோர ஆந்திரா, தெற்கு கர்நாடகா, கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. தொடர்ச்சியாக மழை படிப்படியாக அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

HeavyRain

கனமழை காரணமாக 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த நான்கு மாவட்டங்களிலும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதேசமயத்தில், காவல்துறை,தீயணைப்புத் துறை, மருத்துவம், குடிநீர், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய துறைகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைகள், வணிக நிறுவனங்கள், அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிறுவனங்களும் வழக்கம்போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயத்தில் தனியார் நிறுவனங்களும் மிக குறைந்த பணியாளர்களைக் கொண்டோ அல்லது ஊழியர்களை வீட்டில் இருந்தபடி பணியாற்ற அறிவுரை வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.