படகில் பயணம் செய்யும் குழந்தைகள் புதிய தலைமுறை
தமிழ்நாடு

கன்னியாகுமரி: சாலைவசதி இல்லை... ஆபத்தான முறையில் படகில் பயணம் மேற்கொள்ளும் பழங்குடி மக்கள்

குமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியைச் சுற்றி வாழும் பழங்குடியின மக்கள், சாலை வசதி இல்லாததால் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி வழியாக படகில் பயணம் செய்துதான் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.

PT WEB

கன்னியாகுமரியில் பழங்குடியின மக்களுக்கு சாலை வசதி இல்லாததால் பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் அணைப் பகுதி வழியாக படகில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

குமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியைச் சுற்றி பல பழங்குடியின கிராமங்கள் உள்ளன. பழங்குடியின மக்கள் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி வழியாக படகில் பயணம் செய்துதான் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.

அரசின் அனுமதியின்றி பழங்குடியின மக்கள் இந்த படகு
சேவையை செய்து வருகின்றனர். இதனால் தங்களுக்கு அரசு போக்குவரத்து சேவையை ஏற்படுத்தி தர கோரிக்கை வைத்துள்ளனர்.