தமிழ்நாடு

பழனி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கிய துபாய் வாழ் தமிழர்கள்

பழனி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கிய துபாய் வாழ் தமிழர்கள்

நிவேதா ஜெகராஜா

பழனி அரசு மருத்துவமனைக்கு நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்களை துபாய் வாழ் தமிழர்கள் வழங்கியுள்ளனர்.

பழனி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 200 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் முப்பதுக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு தட்டுப்பாடுயின்றி ஆக்சிஜன் கிடைக்கும் வகையில் தன்னார்வலர்கள் சிலர் ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்களை வழங்கி வருகின்றனர்.

துபாய் வாழ் தமிழர்கள் நல சங்கம் சார்பில் பழனி அரசு மருத்துவமனைக்கு நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்களை வழங்கப்பட்டது. துபாயில் வசித்து வரும் தமிழர்கள் உதவியுடன் பழனியை சேர்ந்த நரசிம்ம ராஜா மற்றும் விஜயகுமார் இந்த ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்களை பழனி அரசு மருத்துவமனைக்கு வழங்கினர்.

- அஜ்மீர் ராஜா