New Pamban Bridge pt desk
தமிழ்நாடு

ராமநாதபுரம்: புதிய பாம்பன் பாலம் அமைக்கும் பணி தீவிரம் - பிரமிப்பை ஏற்படுத்தும் ட்ரோன் காட்சி!

பாம்பன் கடலில் கட்டப்பட்டு வரும் புதிய ரயில் பாலம் மற்றும் பழைய ரயில் பாலத்தின் ட்ரோன் காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.

webteam

செய்தியாளஎர்: அ.ஆனந்தன்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் கடலில் அமைந்துள்ள பழைய ரயில் தூக்கு பாலம் நூற்றாண்டை கடந்ததால் பழைய ரயில் பாலத்திற்கு அருகே ரூ.550 கோடி மதிப்பீட்டில் இந்திய ரயில்வே துறை சார்பில் இருவழி தடம் கொண்ட புதிய ரயில் பால கட்டுமான பணிகள் 2019 ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. புதிய ரயில் பாலத்தில் கட்டுமான பணிகள் நிறைவடைய உள்ள நிலையில், பாலத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

New Pamban Bridge

இந்நிலையில் பாம்பன் புதிய ரயில் பாலத்தின் மையப்பகுதியில் அமையுள்ள செங்குத்து தூக்கு பாலத்தை பாம்பன் புதிய பாலத்தின் மையப் பகுதிக்கு தொடர்ந்து 40 நாட்களாக முயற்சி செய்து கொண்டு வந்து சேர்த்துள்ளனர். தூக்குப்பாலத்தை பொருத்தப் பயன்படுத்தப்படும் இரண்டு தூண்களும் முழுமையாக நிலை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் சுமார் 100 டன் எடை கொண்டதாக சொல்லப்படும் அலுமினியத்தால் ஆன செங்குத்து தூக்கு பாலத்தை பொருத்துவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.

புதிய ரயில் பால இறுதிகட்ட கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், அதன் ட்ரோன் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

பாம்பன் கடலில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய ரயில் பாலத்தை கழுகு பார்வையில் பார்க்கும்போது பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.