தமிழ்நாடு

புதிய வாகனம் வாங்க ஓட்டுநர் உரிமம் கட்டாயமில்லை.... இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்றம்..

புதிய வாகனம் வாங்க ஓட்டுநர் உரிமம் கட்டாயமில்லை.... இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்றம்..

webteam

புதியதாக வாகனம் வாங்க உள்ளவர்கள் கட்டாயம் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 

சில தினங்கள் முன்புதான் வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும் போது கட்டாயம் லைசென்ஸ் உடன் வைத்திருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது தமிழக அரசு. செப்டம்பர் 6 தேதி முதல் அந்த உத்தரவு அமலுக்கு வந்தது. அதற்குள் புதியதாக வாகனம் வாங்க உள்ளவர்கள் கட்டாயம் லைசென்ஸ் வைத்திருப்பது கட்டாயம்  என உத்தரவிடப்பட்டது. 

இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிப்பதாக அறிவித்தது. இந்த வழக்கு குறித்து தமிழக அரசு நான்கு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.