திருப்பத்தூர்  புதிய தலைமுறை
தமிழ்நாடு

ஆம்பூர் | தண்ணீரில் கிடந்த இறகுகள் - கோழி இறைச்சி கழிவுகளோடு விநியோகம் செய்யப்பட்ட குடிநீர்!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் நகராட்சியினரால் விநியோகிக்கப்பட்ட குடிநீரில் கோழி இறைச்சி கழிவுகள் கலந்து வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

PT WEB

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் நகராட்சியினரால் விநியோகிக்கப்பட்ட குடிநீரில் கோழி இறைச்சி கழிவுகள் கலந்து வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட மாங்காய் தோப்பு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கிணற்றின் அருகில் சிலர் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டிச் சென்றுள்ளனர். பலத்த காற்றில் இந்தக் கழிவுகள் கிணற்றில் விழுந்துள்ளது.

இந்நிலையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட குடிநீரில் கோழி இறகுகள் கிடந்ததோடு தண்ணீரும் தூர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது. இதனால், தண்ணீரை குடிக்க முடியாத நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டதையடுத்து உடனடியாக அதிகாரிகள் கிணற்றைச் சுற்றி ஆய்வு மேற்கொண்டனர். கிணற்றின் அருகே கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.