தமிழ்நாடு

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் சென்னைக்கு தண்ணீர் விநியோகம்

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் சென்னைக்கு தண்ணீர் விநியோகம்

webteam

சென்னையில் நிலவி வரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் நெம்மேலி கடல்நீ‌ரை குடிநீராக்கும் திட்‌டத்தின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. 

சென்னைக்கு சோழவரம், பூண்டி, செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஏரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் கல்குவாரி தண்ணீர், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலமாகவும் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. நெம்மேலி, மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் மூலம் ஒரு நாளைக்கு 180 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. 

இதற்கான பணிகளை சென்னைக் குடிநீர் வாரியம் மேற்கொள்கிறது. நெம்மேலியில் கடல்நீரை சுத்திகரித்து 50 கி.மீ தூரத்திற்கு குழாய் அமைத்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது‌. திருவான்மியூர், மேடவாக்கம், எம்.ஆர்.சி நகர்‌, பழைய மகாபலிபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ‌வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து செயற்பொறியாளர் மோகன் கூறுகையில்,  “கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் கடலுக்குள் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. அதை 10 மீட்டர் ஆழத்தில் பதிக்கப்பட்டுள்ளது. கடல்வாழ் உயிரினங்களுக்கு இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அதன் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, மாநில சுற்றுச்சூழல் அமைப்பின் மேற்பாற்வையின் கீழ் இந்தக் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு எடுக்கப்படும் கடல்நீர் பல்வேறு கட்டங்களாக வடிகட்டப்பட்டு அனைத்து உப்புத்தன்மையும் நீக்கப்பட்டு குடிநீராக விநியோகிக்கபடுகிறது” எனத் தெரிவித்தார்.