தமிழ்நாடு

தமிழகத்தில் 6 கோடி வாக்காளர்கள்: வரைவு பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் 6 கோடி வாக்காளர்கள்: வரைவு பட்டியல் வெளியீடு

Rasus

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் 5 கோடியே 95 லட்சத்து 88 ஆயிரத்து 2 வாக்காளர்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மக்கள் தொகை 7 கோடியே 93 லட்சத்து 78 ஆயிரத்து 485 எனவும் அதில் மொத்த வாக்காளர்கள் 5 கோடியே 95 லட்சத்து 88 ஆயிரத்து 2 எனவும் வரைவுப் பட்டியல் தெரிவித்துள்ளது. ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 94 லட்சத்து 84 ஆயிரத்து 492 பேர் எனவும், பெண் வாக்காளர்கள் 3 கோடியே 98 ஆயிரத்து 268 பேர் என்றும் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் பாலின வாக்காளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 242.

பதினெட்டு முதல் 19-ம் வயதுடைய வாக்காளர்கள் 5 லட்சத்து 50 ஆயிரத்து 556 பேர். . ஒரு கோடியே 22 லட்சத்து 5 ஆயிரத்து 888 வாக்காளர்கள் 20 முதல் 29 வயதிற்குட்பட்டவர்கள். 80 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் 10 லட்சத்து 60 ஆயிரத்து 361 பேர் இருக்கின்றனர். தமிழகத்தில் சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிகபட்சமாக 6 லட்சத்து 24 ஆயிரத்து 405 வாக்காளர்கள் உள்ளனர். கீழ்வேளூர் தொகுதியில் குறைந்தபட்சமாக ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 275 வாக்காளர்கள் இருக்கின்றனர் என வரைவுப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.