தமிழ்நாடு

கோயில் குளத்தில் இறக்கும் புறாக்கள் : காரணம் என்ன ?

கோயில் குளத்தில் இறக்கும் புறாக்கள் : காரணம் என்ன ?

webteam

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் புறாக்கள் உயிரிழப்பது 3 ஆவது நாளாக நீடித்துவருகிறது. 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள  சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் உள்ள நாகசுனைத் தெப்பத்தில் தண்ணீர் வெகுவாகக் குறைந்து சிறு குட்டைபோல் காட்சியளிக்கிறது. தெப்பத்தில் உள்ள தண்ணீர் நீண்ட நாள்களாகக் தேங்கிக்கிடப்பதால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. இந்த குட்டையில், தண்ணீர் குடிக்கும் கோவில் புறாக்கள் கடந்த 3 நாட்களாக உயிரிழக்கின்றன. 

இதுபற்றி கோவில் துணை ஆணையர் செல்லத்துரையிடம் கேட்டபோது, தெப்பத்தில் மீன்கள் உயிருடன் உள்ளதால், தெப்பத்தில் உள்ள தண்ணீரைக் குடித்து புறாக்கள் இறக்கவில்லை என்று தெரிவித்தார். அத்துடன் வயலில் மருந்து அடித்த பயிர்களை தின்றுவிட்டு நீர் அருந்த குளத்திற்கு வரும் போது அவை இறந்திருக்கலாம் என்றும் கூறினார். குளத்தில் சுகாதாரம் பராமரிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.