தமிழ்நாடு

“எந்த மொழியையும் திணிக்கக்கூடாது” - வெங்கையா நாயுடு பேச்சு

“எந்த மொழியையும் திணிக்கக்கூடாது” - வெங்கையா நாயுடு பேச்சு

webteam

எந்த மொழியையும் திணிக்கவும் கூடாது, அதேநேரம் எதிர்க்கவும் கூடாது என துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பணிகள் குறித்த புத்தகத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னையில் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் ரஜினிகாந்த், தமிழக பாஜக நிர்வாகிகள்  பங்கேற்றனர்.

விழாவில் பேசிய வெங்கையா நாயுடு, “தேர்தல் தொடர்பான வழக்குகளில் அடுத்த தேர்தலே வந்தும் தீர்ப்பு வெளியாவதில்லை. வழக்குகளுக்கு குறிப்பிட்ட கால அடிப்படையில் தீர்ப்பு வழங்க பரிசீலிக்கலாம். வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அதனை அரசு உறுதிப்படுத்த வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகளாகியும் 20% மக்கள் வளர்ச்சி இல்லாமல் இருப்பது வேதனை. ஒரு கட்சி சார்பில் வென்றவர்கள் கட்சி மாறி அமைச்சராகி விடும் வாய்ப்புகள் தடுக்கப்பட வேண்டும். எந்த மொழியையும் திணிக்கவும் கூடாது; எதிர்க்கவும் கூடாது” என்று தெரிவித்தார்.