தமிழ்நாடு

கல்விக் கட்டணத்தை செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது - தமிழக அரசு

கல்விக் கட்டணத்தை செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது - தமிழக அரசு

webteam

கல்விக் கட்டணத்தை செலுத்துமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என கல்வி நிறுவனங்களை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மீண்டும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் கிட்டத்தட்ட 40 நாட்களாக பலரும் வேலையின்றி வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்.

வருமானம் இல்லாமல் பலரும் இருப்பதால் வழக்கமான செலவுகளை சமாளிப்பதே கேள்விக்குறியாகி உள்ளது. இதனை அடுத்து வங்கி மாத தவணை, வீட்டு வாடகை போன்ற மாதச்செலவுகளுக்கு அரசு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நேரத்தில் கல்விக் கட்டணத்தை செலுத்துமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என கல்வி நிறுவனங்களை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது