தமிழ்நாடு

நள்ளிரவில் கோவில்களை திறக்க தடை: எச்.ராஜா கோரிக்கை

நள்ளிரவில் கோவில்களை திறக்க தடை: எச்.ராஜா கோரிக்கை

webteam

ஆங்கில புத்தாண்டுக்காக நள்ளிரவில் கோவில்களை திறக்க தடை விதிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜா வலியுறுத்தியுள்ளார். 

புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் கோயில்களை திறக்க தடை விதிக்க கோரி வழக்கறிஞர் அஸ்வத்தாமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம் நேற்று முன் தினம் தள்ளுபடி செய்து, வழக்கை ஒத்தி வைத்தது.

இந்நிலையில் பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜா, ஆங்கில புத்தாண்டுக்காக நள்ளிரவில் கோவில்களை திறக்க தடை விதிக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.  

இது தொடர்பாக ட்விட்டரில் அவர், ஜனவரி 1 ஆங்கில புத்தாண்டு என்றாலே இளைஞர்கள் மது அருந்தி வீதிகளில் கலாட்டா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே இரவு 1 மணிக்கு மேல் யாரும் கொண்டாடக் கூடாது என்று காவல்துறை அறிவித்துள்ளதை ட்விட்டரில் சுட்டிக்காட்டியுள்ளார். அதே போல நள்ளிரவில் கோவில்களை திறந்து வைத்திருப்பதும் ஆகம விதி மீறலாகும் என்றும், எனவே அரசு அதனை தடை செய்ய வேண்டும் என்றும் எச். ராஜா வலியுறுத்தியுள்ளார்