seeman pt desk
தமிழ்நாடு

"தண்ணீர் தா, தராமல் போ: காவிரியில் தமிழகத்திற்கு உரிமை உள்ளதா இல்லையா" - சீமான் கேள்வி

தமிழகத்திற்கு தண்ணீர் தா, தராமல் போ ஆனால் காவிரியில் தமிழகத்திற்கு உரிமை உள்ளதா இல்லையா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.

webteam

சேலம் மாவட்டம் மேட்டூர் சதுரங்காடியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் காவிரி எங்கள் உரிமை என்ற என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

காவிரி எங்கள் உரிமை என்ற முழக்கத்தோடு பேசத் தொடங்கிய சீமான், "வீரப்பன் உயிரோடு இருக்கும் வரை காவிரியில் தண்ணீர் திறப்பு முறையாக வந்து கொண்டிருந்தது. வீரப்பன் யானையைக் கொன்றான் தந்தத்தை விற்றான் என்று சொன்ன அரசாங்கம் வாங்கியவன் யார் என்று கண்டுபிடித்து ஏன் கைது செய்யவில்லை, வீரப்பன் வெளியே வந்து உண்மையை சொன்னால் பலபேர் சிறைக்குச் செல்ல நேரிடும் என்பதால் வீரப்பனை கொல்வதையே இலக்காக கொண்டனர்.

farmer land

தமிழகத்திற்கு தண்ணீர் தா அல்லது தராமல் போ ஆனால் காவிரியில் தமிழகத்திற்கு உரிமை உள்ளதா இல்லையா, நான் முதலமைச்சரான பிறகு காவிரிக்காக கன்னடனை கையேந்து வைக்கிறேன்னா இல்லையா பார்.

cm stalin

இந்திரா காந்தி பிரதமராக இருக்கும்போது பாண்டியாரு பொன்னம்பல ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் கேரளாவில் ஆறு மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதனை தடுத்து அணைக்கட்டி அங்கு திறக்கப்படும் தண்ணீரை ராட்சத குழாய்கள் மூலம் மேட்டூர் அணையை நிரப்பப் போகிறோம். விவசாய சின்னத்தில் வாக்களித்துவிட்டு வீட்டில் போய் படுத்துக்கொள் உனக்கான அனைத்து திட்டங்களும் வீடு தேடி வரும்.

தஞ்சை தரணியில் வேர்வை சிந்தி உழைத்து உற்பத்தி செய்யக்கூடிய நெல்மணிகளை கொள்முதல் செய்து பாதுகாக்க கிடங்குகள் கூட இல்லாத இந்த நாட்டில் நெல் மூட்டைகள் பாலாகி வரும் நிலையில் மதுவுக்கு குடோன் வைத்து பாதுகாக்கும் அரசு மீது உனக்கு ஏன் கோபம் வரவில்லை.

ஆடு மாடு கோழி மற்றும் பட்டுப்புழு வளர்ப்பவனுக்கு அரசு பணி, இது என்ன சீமான் கற்காலத்திற்கு அனைவரையும் கொண்டு செல்கிறார் என்று கேட்பவனும் சோறு தான் தின்றாக வேண்டும். உணவு தானிய வகைகளுக்காக உலக நாடுகளை தன்னிடம் கையேந்த வைப்பது உறுதி.

Congress rally

தமிழகத்தில் இனி படிக்காதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவதே அடுத்த வேலை. படிக்காதவனுக்கும் சுற்றுலாத் துறையில் ஒரு லட்சம் ஊதியத்தில் தமிழகத்தின் கோடை வாசஸ்தலங்கள் கோயில் நகரங்களுக்கு வரக்கூடிய வெளிநாட்டவர்களுக்கு அதன் வரலாறை எடுத்துக் கூற டூரிஸ்ட் கைடு திட்டம். விவசாயிக்கு அரசு வேலை என்றால் ஏளனப்படுத்தும் நீங்கள் படித்தவனை மதுக்கடையில் வேலையில் அமர்த்தியது முறையா சிந்தித்துப் பார்க்க வேண்டும். உங்களுக்காக கத்துவதற்கு நான் மட்டுமே உள்ளேன். என்னை விட்டால் வேறு யாரும் கிடையாது. நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை உலகத்தின் தலைசிறந்த நாடாக மாற்றுவேன்” என்று பேசினார்.