தமிழ்நாடு

காசநோய்க்கு பதில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்! உயிருக்கு போராடும் இளைஞர்

காசநோய்க்கு பதில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்! உயிருக்கு போராடும் இளைஞர்

webteam

காசநோய்க்கு பதிலாக புற்றுநோய்க்கான சிகிச்சை அளித்ததால், உயிருக்கு போராடும் இளைஞருக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய வலியுறுத்தி முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவில் மதுரையைச் சேர்ந்த 22 வயது இளைஞர் தன் பெற்றோருடன் வருகை தந்து மனு ஒன்றை அளித்தார். மூக்கில் டியூப் பொருத்தியபடி வந்திருந்த இளைஞரின் பெற்றோர்கள் தன் மகனுக்கு ஆரம்பநிலை காசநோய் இருந்த காரணத்தினால் மதுரை விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றதாகவும், அங்கு காசநோய்க்கு பதிலாக புற்றுநோய்க்கான அறுவைச் சிகிச்சையை மருத்துவர்கள் செய்துவிட்டதாக கூறினர். 

15 நாட்களில் சரியாகிவிடும் என அம்மருத்துவமனையின் மருத்துவர் அமுதன் கூறிய நிலையில், தனது மகன் செல்வக்குமாரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்த காரணத்தினால் சென்னைக்கு வந்து, அங்கு மலர் மருத்துவமனை, மெடிசிட்டி மருத்துவமனை, காமாட்சி மருத்துவமனை, செண்ட் தாமஸ் மருத்துவமனைகளில் தனது மகனுக்கு காச நோய் இல்லை என்று புற்றுநோய்க்கும், புற்றுநோய் இல்லை என்று காசநோய்க்கும் மாற்றி மாற்றி சிகிச்சை அளித்துள்ளதாகவும் இளைஞரின் தயார் நளாயினி கூறினார். மேலும் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் மகனுக்கு தேவையான உதவிகளை அரசு முன்வரவேண்டும் எனவும், தவறான சிகிச்சையளித்த மருத்துவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.