தமிழ்நாடு

நெகிழி பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்

நெகிழி பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்

kaleelrahman

பண்டிகை காலத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை தவிர்த்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளை பயன்படுத்த வேண்டும் என பொதுமக்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், தீங்கு விளைவிக்கும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தேநீர் கோப்பைகள், பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தெர்மாகோல் கோப்பைகள், தண்ணீர் பைகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் கொடிகள் ஆகியவற்றை பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.