தமிழ்நாடு

என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் - ரஜினி அறிக்கை

webteam

அரசியலுக்கு ஏன் வரமுடியவில்லை என்ற காரணத்தை ஏற்கெனவே கூறிவிட்டேன். இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டும் என நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மன்ற நிர்வாகிகளும், மன்றப்பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்களும் சென்னையில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினர். கட்டுப்பாடுடன், கண்ணியத்துடன் நடந்த போராட்டத்திற்கு பாராட்டுகள். ஆனால் தலைமையின் உத்தரவை மீறி நடத்தியது வேதனை அளிக்கிறது.

தலைமையின் உத்தரவை மதித்து போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களுக்கு நன்றி. நான் என் முடிவை கூறி விட்டேன். தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன். ” என்று குறிப்பிட்டுள்ளார்.

நேற்று வள்ளூவர் கோட்டத்தில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் போராட்டம் நடத்திய நிலையில், தற்போது ரஜினிகாந்த் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.