தமிழகத்தில் திமுக கூட்டணி 160 முதல் 170 இடங்களுடன் ஆட்சி அமைக்கும் என்று ரிபப்ளிக் டிவி தனது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளது.
திமுக கூட்டணி 160-ல் இருந்து 170 இடங்கள் வரையிலும், அதிமுக கூட்டணி 58-ல் இருந்து 68 இடங்கள் வரையிலும், அமமுக கூட்டணி 4-ல் இருந்து 6 இடங்கள் வரையிலும், மநீம கூட்டணி 0 முதல் 2 இடங்கள் வரையிலும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிபப்ளிக் சேனல், சி.என்.எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளின் விவரம்
தமிழகம் 234/234:
> திமுக கூட்டணி: 160 - 170
> அதிமுக கூட்டணி: 58 - 68
> அமமுக கூட்டணி: 4 - 6
> மநீம கூட்டணி: 0 - 2
> நாதக - 0
> பிற - 0
தமிழகத்தில் திமுக கூட்டணி 48.91 சதவீத வாக்குகளையும், அதிமுக கூட்டணி 35.05 சதவீத வாக்குகளையும் கைப்பற்றும் என்றும் ரிபப்ளிக் சேனலின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு கூறுகிறது. அமமுக கூட்டணி 6.40%, மநீம கூட்டணி 3.62%, மற்றவை 6.02% வாக்குகளைப் பெறும் என்று கணித்துள்ளது.