தமிழ்நாடு

முரசொலி இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்

முரசொலி இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்

webteam

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி நாளேட்டின் இணையதளத்தை லீஜியன் குழுவைச் சேர்ந்த ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடப்பதாகவும் அவற்றில் நடைபெறும் வாக்குப்பதிவில் நம்பகத்தன்மை இல்லை என்றும் வாசகம் இடம்பெற்றுள்ளது. எனவே நாட்டை காக்க மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களைத் தடைசெய்ய வேண்டும் என்றும் முரசொலி இணையதளத்தில் ஊடுருவி வாசகங்கள் இடம்பெற செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவில் நடைபெறும் தேர்தல் முறையை ஏற்றுக்கொண்டு, உத்தரப்பிரதேச மாநிலத்தில் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

லீஜியன் குரூப் என்ற பெயரில் முரசொலி இணையதளம் முடக்கப்பட்டிருக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடப்பதாகவும் அவற்றில் நடைபெறும் வாக்குப்பதிவில் நம்பகத்தன்மை இல்லை என்றும் வாசகம் இடம்பெற்றுள்ளது. எனவே நாட்டை காக்க மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களைத் தடைசெய்ய வேண்டும் என்றும் முரசொலி இணையதளத்தில் ஊடுருவி வாசகங்கள் இடம்பெற செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவில் நடைபெறும் தேர்தல் முறையை ஏற்றுக்கொண்டு, உத்தரப்பிரதேச மாநிலத்தில் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.