தமிழ்நாடு

அரசிடம் ஒருங்கிணைப்பு இல்லை - மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

அரசிடம் ஒருங்கிணைப்பு இல்லை - மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

webteam

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் 66 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் அரசின் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அதில், ஊரடங்கில் தளர்வு கொடுத்து கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா வரச் செய்துவிட்டனர். கொரோனா நடவடிக்கையில் அரசிடம் ஒருங்கிணைப்பு, வெளிப்படையில்லை. நோய் அறிகுறி சோதனைகளை அரசு சரிவர செய்யவில்லை. ஊரடங்கில் குளறுபடி நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அரசு முன்வரவில்லை. எதையும் வெளிப்படையாக அரசு செய்யவில்லை. அதனால், திமுக சார்பில் 121 தொகுதிகளில் 22 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

ஒன்றினைவோம் வா நிகழ்ச்சியின் செயல்பாடுகள் குறித்து பிறகட்சியினர் பொறாமைப்படுகின்றனர். 1000 ரூபாய் நிதியுதவி செய்யக்கோரி முதன் முதலில் கோரிக்கை விடுத்தேன்” எனப் பேசினார். இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது