பிரியாணி வழங்கிய திமுக தொழிலதிபர் pt desk
தமிழ்நாடு

கரூர்: பிணையில் விடுவிக்கப்பட்ட செந்தில் பாலாஜி – 5,000 பேருக்கு பிரியாணி வழங்கிய திமுக தொழிலதிபர்

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பிணையில் விடுவிக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் கரூரைச் சேர்ந்த திமுக தொழிலதிபர் தோகை முருகன் 5 ஆயிரம் நபர்களுக்கு சிக்கன் பிரியாணி விருந்து அளித்தார்.

PT WEB

செய்தியாளர்: வி.பி. கண்ணன்

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, 471 நாட்களுக்குப் பிறகு நேற்று மாலை பிணையில் வெளியே வந்தார். இதைக் கொண்டாடும் வகையில் கரூர் மாவட்ட திமுகவினர் பல இடங்களில் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

திமுக தொழிலதிபர்

இதன் தொடர்ச்சியாக இன்று கரூர் அடுத்த செம்படாபாளையத்தில் திமுகவைச் சேர்ந்த தொழிலதிபர் தோகை முருகன் என்பவர். பொதுமக்கள் 5 ஆயிரம் பேர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கினார்.

இதற்காக, 1500 கிலோ சிக்கன், 5 ஆயிரம் முட்டை, 750 கிலோ அரிசியில் பிரியாணி தயாரிக்கப்பட்டு பொட்டலமாக கட்டப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. செம்மடாம்பாளையத்தைச் சேர்த்த பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பிரியாணி பொட்டலங்களை வாங்கிச் சென்றனர்.