செந்தில் பாலாஜியை முதலமைச்சர் தியாகி எனக் கூறியதை விமர்சித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள ஆர்.எஸ்.பாரதி, செந்தில் பாலாஜி மீதுள்ள வழக்குகளையும் அதன் பின் உள்ள அரசியலையும் புரிந்துகொள்ளாமல் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும்போது நீங்கள் ஏன் பாஜகவில் சேரக்கூடாது என அமலாக்கத்துறையினர் கேட்டதாக வழக்கறிஞர் கூறியதாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். திமுகவிற்கு எதிராக செந்தில் பாலாஜியை களமாட வைக்க நடந்த முயற்சிக்கு அவர் அடிபணியவில்லை என்றும் இதுதான் அவரது தியாகம் என்றும் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
மருத்துவக் கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கிய விவகாரத்தில் அமலாக்கத்துறை பிடியிலிருந்து தப்பிக்கத்தான் அன்புமணி பாஜகவிடம் தஞ்சமடைந்துள்ளதாக ஆர்எஸ் பாரதி குறிப்பிட்டுள்ளார். ராமதாஸ், தான் செய்த பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும் என்றும் அறிக்கையில் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டுள்ளார்