ஜெகத்ரட்சகன் pt web
தமிழ்நாடு

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் தொடர்புடைய 40+ இடங்களில் வருமானவரித்துறை சோதனை! காரணம் இதுதான்!

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

PT WEB

சென்னை தியாகராய நகரில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ஹோட்டல், ஆழ்வார் ஆய்வு மையம், வேளச்சேரியில் உள்ள பல் மருத்துவமனை, அடையாறு பகுதியில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகம் உட்பட சுமார் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதுதவிர, பூந்தமல்லியில் உள்ள சவீதா மருத்துவக் கல்லூரியிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஜெகத்ரட்சகன் மீது வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில், இன்று காலை முதல் 70 வாகனங்களில் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் அவர் தொடர்புடைய இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆவடி அருகே பட்டாபிராமில் இவரின் பணியாளர் ஒருவரின் வீட்டில் சோதனைக்குச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள், வீடு பூட்டியிருந்ததால் பூட்டை உடைத்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரி அகரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.