மக்களவைத் தேர்தலையொட்டி, வரும் 11ஆம் தேதி திமுக. எம்.பி, எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவா லயத்தில் நடக்கிறது.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், கூட்டணி உடன்பாட்டில் தீவிரமாக ஈடு பட்டுள்ளன. பல கட்சிகள் கூட்டணியை முடிவு செய்து தொகுதி ஒதுக்கீட்டையும் முடித்துவிட்டன. தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமாக, புதிய நீதிக் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. தேமுதிக, அந்த கூட்டணியோடு இணையும் என்று தெரிகிறது.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனி யன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்தக் கூட்டணியில், கட்சிகளுக்கு இடையிலான தொகுதி ஒதுக்கீடு இன்று முடிந்துவிட்டது. மக்களவை தேர்தலில் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்நிலையில் தேர்தலையொட்டி, வரும் 11 ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் கூட்டம் அண்ணா அறிவால யத்தில் நடக்கிறது. கலைஞர் அரங்கில் அன்று காலை 10 மணிக்குத் தொடங்கும் இந்தக் கூட்டம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலை மையில் நடைபெறுகிறது. இதை திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.