தமிழ்நாடு

தயாராகும் நினைவிடம் : கண்ணீர் வெள்ளத்தில் இறுதி ஊர்வலம்

தயாராகும் நினைவிடம் : கண்ணீர் வெள்ளத்தில் இறுதி ஊர்வலம்

webteam

அண்ணா நினைவிடத்தின் பின்புறம் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். ராஜாஜி ஹாலில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 

கருணாநிதியின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. ராஜாஜி ஹாலில் இருந்து புறப்பட்டு சிவானந்தா சாலை, வாலாஜா சாலை வழியாக இறுதி ஊர்வலம் அண்ணா சதுக்கம் சென்று கொண்டிருக்கிறது. அவரது உடலை சுற்றி திமுக தொண்டர்கள் மற்றும் மக்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். கண்ணீர் கடலில் கருணாநிதி, அண்ணாவைக் காண புறப்பட்டுச் சென்றுகொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அண்ணா நினைவிடத்தின் பின்புறத்தில், கருணாநிதியை அடக்கம் செய்யும் நினைவிடம் தயாராகி வருகிறது. பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. அங்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இருந்து பணிகளை கவனித்து வருகிறார். அந்த இடத்தில் பெரியஅளவு மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.