தமிழ்நாடு

நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு

webteam

தமிழக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக முறையிட்டுள்ளது.

இதுதொடர்பாக உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி பொறுப்பு வகிக்கும் குலுவாடி ஜி.ரமேஷ் தலைமையிலான அமர்வு முன்பாக வழக்கறிஞர் சண்முக சுந்தரம் முறையிட்டார். அப்போது, பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது திமுக உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகவும், இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பினை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் முறையிட்டார். இதனை அவசர வழக்காக விசாரிக்கவும் திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. வழக்கறிஞரின் முறையீட்டை கேட்ட நீதிபதிகள், அதனை ஒரு மனுவாகத் தாக்கல் செய்தால் அவசர வழக்காக நாளை விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனர்.