தமிழ்நாடு

எம்.எல்.ஏ முதல் பொதுச் செயலாளர் வரை: க.அன்பழகனின் அரசியல் பயணம்

எம்.எல்.ஏ முதல் பொதுச் செயலாளர் வரை: க.அன்பழகனின் அரசியல் பயணம்

rajakannan

உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 24 ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1 மணியளவில் அன்பழகன் உயிர்பிரிந்தது.

இதையடுத்து அவரது உடல் திமுக கொடி போர்த்தப்பட்டு கீழ்ப்பாக்கம் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. திமுக நிர்வாகிகள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அன்பழகனுக்கு இறுதியஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மறைந்த க.அன்பழகனின் அரசியல் பயணம்:-

1922 ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் காட்டூரில் பிறந்தவர் க.அன்பழகன்

தனித்தமிழ் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு இயற்பெயரான ராமையாவை அன்பழகன் என மாற்றிக்கொண்டார்

1943ஆம் ஆண்டு கருணாநிதி நடத்திய மாணவர் மன்ற விழாவில் பங்கேற்றார் அன்பழகன்

பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ்ப் பயின்று அங்கேயே பேராசிரியராக பணியாற்றினார்

தி.க.-வில் இணைந்து பணியாற்றிய அன்பழகன் திமுக தொடங்கப்பட்ட போது அதில் இணைந்தார்

தமிழ் இனம் குறித்து அதிகம் பேசியதால் பேராசிரியர் அன்பழகன் இனமான பேராசிரியர் ஆனார்

1957ஆம் ஆண்டு சென்னை எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்

1962ஆம் ஆண்டு சட்டமன்ற மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் க.அன்பழகன்

1964-ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றதற்காக 6 மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்

1967-ல் திருச்செங்கோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்

1971- சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சராக பணியாற்றினார்

1974ஆம் ஆண்டு திமுகவின் பொருளாளர் ஆனார் பேராசிரியர் க.அன்பழகன்

நெருக்கடி நிலையின் போது இந்திரா காந்திக்கு எதிராக போராட்டம் நடத்தி சிறை சென்றவர்

1978ஆம் ஆண்டு முதன்முறையாக திமுக பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வானார்

1983-ல் ஈழப்பிரச்னைக்காக சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார் க.அன்பழகன்

1989, 1996-ல் திமுக ஆட்சியில் தமிழக கல்வி அமைச்சராக அன்பழகன் பணியாற்றியுள்ளார்

2006ஆம் ஆண்டு கருணாநிதி அமைச்சரவையில் நிதியமைச்சராக பதவி வகித்தவர்

அன்பழகன் நிதியமைச்சராக இருந்த போதுதான் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம் அறிமுகம்