தமிழ்நாடு

ஆளுநர் பன்வாரிலாலை இன்று சந்திக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்?

ஆளுநர் பன்வாரிலாலை இன்று சந்திக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்?

rajakannan

திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜ்பவனில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள இந்த சந்திப்பில், ஸ்டாலினுடன் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

திமுக மீது அதிமுகவும், அதிமுகவும் சமீக காலமாக மாறிமாறி ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றன. திமுக மீது 2ஜி வழக்கு, சர்க்காரியா கமிஷன் அறிக்கை உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்சி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதேபோல் அதிமுக மீது துறை ரீதியாக டெண்டர் முறைகளிலும் ஊழல் நடைபெறுவதாக திமுக குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகின்றது.

இந்த நிலையில்தான், தமிழக அரசு மீது சில ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆளுநரை சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் மனு அளிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.