தமிழ்நாடு

ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 23 வயதேயான திமுகவின் இளம் வேட்பாளர்!

ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 23 வயதேயான திமுகவின் இளம் வேட்பாளர்!

கலிலுல்லா

ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

நகர்புற உள்ளாட்சித்தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான மாநகராட்சிகளையும், நகராட்சிகளையும், பேரூராட்களையும் திமுக முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி 1வது வார்டில் திமுக சார்பில் இளம் வேட்பாளர் சுகன்யா போட்டியிட்டார்.

அதிமுக சார்பில் வினிதா களமிறக்கப்பட்டார். வாக்கு எண்ணிக்கை முடிவில் அறிவிக்கப்பட்டன. இதில், அதிமுக வேட்பாளர் வினிதா 453 வாக்குகள் பெற்றிருந்தநிலையில், திமுக வேட்பாளர் சுகன்யா 454 வாக்குகள் பெற்று வெற்றியை பதிவு செய்துள்ளார். இது போன்ற வெற்றிகளின் மூலம் ஒற்றை வாக்கின் முக்கியத்துவத்தை வாக்காளர்கள் அறிந்துகொள்ள முடிகிறது.

அதேபோல, மேலூர் நகராட்சியில் 19வது வார்டில் போட்டியிட்ட 22 வயது இளைஞர் ரிஷி , அதிமுக மற்றும் அமமுக வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்து வெற்றி பெற்றுள்ளார். இதன் காரணமாக மேலூர் நகராட்சியில் திமுகவின் பலம் 25 ஆக உயர்ந்துள்ளது

இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரும் , முன்னாள் நகராட்சி சேர்மனுமான சாகுல் ஹமீது என்பவரையும் , அமமுக வேட்பாளர் பெரிய துறையையும் டெபாசிட் இழக்க செய்து வெற்றி பெற்றது மேலூர் அரசியலில் பேசு பொருளாகி உள்ளது.