தங்கதமிழ்செல்வன் File Image
தமிழ்நாடு

”அதிமுகவுக்கு போட்டியாக ஆக.20-ல் போராட்டமா?”- ஜெயக்குமார் விமர்சனத்துக்கு தங்கதமிழ்செல்வன் விளக்கம்

மதுரையில் அதிமுக மாநாடு நடைபெறும் ஆகஸ்ட் 20ஆம் தேதி அன்று நீட் தேர்வுக்கு எதிராக திமுக உண்ணாவிரத போராட்டம் அறிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Justindurai S

தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் அதற்கு மத்திய அரசு இதுவரை சம்மதிக்கவில்லை. இந்த நிலையில் மத்திய அரசையும், ஆளுநரையும் கண்டித்து வருகிற 20ஆம் தேதி தி.மு.க. உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்து உள்ளது. தி.மு.க. இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ அணியினர் பங்கேற்கும் இந்த உண்ணாவிரத போராட்டம் ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் நடைபெற உள்ளது.

மதுரையில் அதிமுக மாநாடு நடைபெறும் ஆகஸ்ட் 20ஆம் தேதி அன்று நீட் தேர்வுக்கு எதிராக திமுக உண்ணாவிரத போராட்டம் அறிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,

"அதிமுக மாநாடு வெளியே தெரிந்துவிடக்கூடாது. திமுகவினரின் ஆர்ப்பாட்டம்தான் தெரியவேண்டும் என்பதற்காக மாவட்டம் தோறும் நீட் தேர்வைக் கண்டித்து ஆகஸ்ட் 20-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை வைத்துள்ளனர். இது ஓர் அரசியல் காழ்ப்புணர்ச்சி" என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், ஜெயக்குமாரின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள தங்கதமிழ்செல்வன், ”அவசர சூழல் காரணமாகவே வருகிற 20ஆம் தேதி தி.மு.க. உண்ணாவிரத போராட்டத்தை அறிவிக்கப்பட்டுள்ளது. 'நான் கூட தான் அன்றைய நாளில் கம்பத்தில் என் மகளுக்கு திருமணம் நடத்துகிறேன். அதற்காக அது போட்டி ஆயிடுமா'' என்று கூறினார்.