தமிழ்நாடு

திமுக கூட்டிய கூட்டத்தில் என்னென்ன தீர்மானங்கள்?

திமுக கூட்டிய கூட்டத்தில் என்னென்ன தீர்மானங்கள்?

Rasus

விவசாயிகளின் பிரச்னையை தீர்க்க, திமுக சார்பில் சென்னையில் இன்று காலை அனைத்துக் கட்சிக்கூட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் காதர் மொய்தின் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றிய விவரங்கள் வருமாறு:

0) விவசாயிகளுடன் சேர்ந்து அனைத்துக் கட்சித் தலைவர்களும் பிரதமரை சந்திப்பது,

0) காவிரி மேலாண்மை வாரியம்-காவிரி ஒழுங்காற்றுக் குழுவை உடனே உருவாக்க வலியுறுத்தல்.

0) விவசாயிகளின் கடன் அனைத்தையும் தள்ளுடி செய்ய கோரிக்கை.

0) உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி அனைத்து தரப்பு விவசாயிகளின் கடன்களையும் தமிழக அரசு தள்ளுபடி செய்யவேண்டும்.

0) காவிரி டெல்டா பகுதிகளை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கவேண்டும்.

0) அண்டை மாநிலங்கள் தடுப்பணைகள் கட்டுவதை தடை செய்யவேண்டும்.

0) மீத்தேன் திட்டமும், ஹைட்ரோ கார்பன் திட்டமும் கைவிடப்படவேண்டும்.

0) நெல் மற்றும் கரும்புக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்யவேண்டும்.

0) முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

0) சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை உடனே கூட்டவேண்டும்.

0) குடிநீர் பிரச்னையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை .

0) முழு மதுவிலக்கு உடனடியாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.

0) நீட் தேர்வுக்கு விதிவிலக்கு அளிக்கும் தமிழக அரசின் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவேண்டும் என்பது உட்பட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.