தொண்டர்கள் அமைதியாகவும், பாதுகாப்பாக செல்ல வேண்டுமென திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உடல்நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, சென்னை அண்ணாசாலையில் உள்ள ராஜாஜி மஹாலில் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. காலை முதல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், திமுக தொண்டர்கள், பொதுமக்கள் எனப் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து, மாலை 4 மணியளவில் கருணாநிதியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அண்ணா நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், திமுக தலைவர் துயரச் சுமையைத் தாங்கியபடி திரும்பியபடி செல்பவர்கள் அமைதியாகவும், பாதுகாப்பாக செல்ல வேண்டுமென ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் கூறுகையில், “உடன்பிறப்புகள் பத்திரமாக வீடு திரும்பிவிட்டார்கள் என அறிந்த பிறகு தான் நான் உறங்கச் செல்வேன். பயணத்தில் பத்திரமாக செல்ல வேண்டும் எனவும் இருகரம் கூப்பி வேண்டுகிறேன்” என்றார்.