பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைத் தமிழக அரசு காலங்கடந்து ரத்துசெய்திருப்பதை தேமுதிக வன்மையாகக் கண்டிக்கிறது என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
10,11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இந்தாண்டு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நிலுவையில் உள்ள 12-ஆம் வகுப்புத் தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைத் தமிழக அரசு காலங்கடந்து ரத்து செய்திருப்பதை தேமுதிக வன்மையாகக் கண்டிக்கிறது என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள விஜயகாந்த்,
''அரசு ஒரு கொள்கை முடிவு எடுத்தால், அதில் உறுதியாக இருக்கவேண்டும். நாளும் ஒரு நிலைப்பாடு எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.அண்டை மாநிலமான தெலுங்கானா, ஐகோர்ட் கண்டணம், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு, ஆசிரியர்கள் எதிர்ப்புக்குப் பிறகு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைத் தமிழக அரசு ரத்துசெய்திருப்பதை தேமுதிக வன்மையாகக் கண்டிக்கிறது.
இதனால் மாணவர்கள்,பெற்றோர்கள், ஆசிரியர்கள் குழப்பமடைந்துள்ளனர்.'கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்' என்பது போல் ஹால்டிக்கெட், தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்தபிறகு,காலங்கடந்த முடிவை முதலிலேயே எடுத்திருந்தால், தேமுதிக வரவேற்றிருக்கும்'' எனத் தெரிவித்துள்ளார்