அக்வாமேன் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்து மகிழ்ந்ததாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அண்மைக் காலமாக விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இது தவிர வெளிநாடுகளுக்குச் சென்றும் அவர் சிகிச்சை எடுத்து வருகிறார். சமீபத்தில் கூட உடல்நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியான நிலையில், தற்போது அக்வாமேன் திரைப்படத்தை ஐமேக்ஸ் திரையரங்களில் கண்டு மகிழ்ந்ததாக தனது மனைவி பிரேமலதா உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.