விஜய் எல்.முருகன்  pt desk
தமிழ்நாடு

"விஜய் கூட சொல்கிறார்.. திமுக மட்டும் ஏன் தயங்குகிறது.?" - தீபாவளி வாழ்த்து குறித்து எல். முருகன்

தீபாவளிக்கு இது வரை வாய் திறக்காதவரும் இப்போது வாய் திறந்து வாழ்த்து சொல்லி இருக்கிறார். இதுவே எங்களுக்கு வெற்றி தான். முதலமைச்சரும் விரைவில் வாழ்த்து சொல்வார் என நம்புகிறோம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

PT WEB

செய்தியாளர்: பால வெற்றி வேல்

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் புத்தாடைகள் உடுத்தி, இனிப்புகளை வழங்கி, பட்டாசு வெடித்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தனது இல்லத்தில் பட்டாசு வெடித்து மக்களுக்கும் தூய்மை பணியாளர்களுக்கும் இனிப்புகள் வழங்கி தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.

cm stalin

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசியபோது....

உலகம் முழுவதும் இருக்கும் தமிழக மக்கள் சகோதர சகோதரிகள் என அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். இந்த தீபாவளி இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுக்கக் கூடியது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட பிறகு முதல் தீபாவளியாக இந்த தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. நல்ல விசயங்களை எடுத்துக் கொண்டு தீய விசயங்களை ஒழிக்க வேண்டும். நாட்டின் வளச்சிக்கு நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்.

திமுக என்ற நரகாசுரனை 2026-ல் ஒழித்த பிறகு தீபாவளி பண்டிகையை மிகச் சிறப்பாக கொண்டாடுவோம் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லவே மாட்டோம் என இருந்தவர்கள் தற்போது வாயை திறந்து வாழ்த்தி இருக்கிறார்கள் என்று துணை முதலவர் குறித்தான கேள்விக்கு பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், விஜய் கூட தீபாவளிக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார். அவருக்கும் வாழ்த்துகள் என கூறினார்.

தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில் என்ன தயக்கம் உள்ளது. அனைத்து திருவிழாக்களுக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும். அனைவருக்கும் பொதுவான முதலமைச்சர் ஏன் வாழ்த்து சொல்வதில்லை. அவரும் வாழ்த்து சொல்லுவார் என்று எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தார்.