தமிழ்நாடு

தீபாவளிக்கு ட்ரெண்டாகும் பலகார மாவு

தீபாவளிக்கு ட்ரெண்டாகும் பலகார மாவு

webteam

தீபாவளிக்காக வீட்டிலேயே எளிதில் பலகாரங்கள் செய்ய பயன்படும், இன்ஸ்டன்ட் இனிப்பு பலகார மாவு வகைகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது.

தீபாவளி என்றாலே முறுக்கு, அதிரசம், சீடை உள்ளிட்ட பல்வேறு பலகாரங்களை பொதுமக்கள் வீடுகளில் செய்வது வழக்கம். ஆனால் தற்போது உள்ள தலைமுறையினரில் பெரும்பாலானோருக்கு இவைகளை எவ்வாறு செய்வதென்று தெரியாத நிலைதான் உள்ளது. இதற்காக தற்போது எளிதில் பலகாரங்களை செய்யும் வகையில் இன்ஸ்டன்ட் இனிப்பு பலகாரமாவு விற்கப்படுகிறது. இந்த மாவு இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டு, வீட்டிற்கு தேவையான அளவு இனிப்பு மற்றும் பலகாரங்களை செய்யும் வகையில் கிடைப்பதால், நேரம் மிச்சமாவதாக இல்லத்தரசிகள் கூறுகிறார்கள். இதனால் தீபாவளி பண்டிகைக்கான இன்ஸ்டண்ட் இனிப்பு பலகார மாவு விற்பனை சூடுபிடித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இந்த இன்ஸ்டண்ட் மாவு விற்பனை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. நாகை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கான ஸ்பெஷல் ரெசிப்பிகளாக தேன்குழல் உளுந்து முறுக்கு மாவு, மகிழம்பூ பாசிபயறு முறுக்கு மாவு, அதிரசம் பேஸ்ட் மிக்ஸ், சர்க்கரை அதிரசம் பேஸ்ட் மிக்ஸ், ரவா உருண்டை மிக்ஸ் மற்றும் பயறு உருண்டை மிக்ஸ் போன்றவைகள் எளிதாகவும், விரைவாகவும் செய்யும் வகையில் ரெடிமேட் மிக்ஸ்களாக விற்பனையில் செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 
மயிலாடுதுறையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக 100 சதவிகிதம் இயற்கையான முறையில் வீட்டு முறைப்படி தயாரிக்கப்படும் சத்துமாவு மற்றும் இனிப்பு பலகார வகைகள் தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.