தமிழ்நாடு

தீபாவளி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

தீபாவளி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

Rasus

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

புத்தாடை உடுத்தியும், இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் மக்கள் உற்சாகமாக தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர். இவர்களில் புதுமணத் தம்பதிகள் தங்களது தலைதீபாவளியை குடும்பதினரோடு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சிறுவர்கள் வீட்டு வாசல்களில் பட்டாசுகளை வெடித்து தங்களது அளவில்லா மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதுமட்டுமின்றி குடும்பத்தோடு கோயில்களுக்கும் சென்று பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். தீபாவளி பண்டிகையொட்டி பெரும்பாலான கோயில்களில் சிறப்பு பூஜைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாத் தலங்களுக்கும் ஏராளமான பொதுமக்கள் செல்வார்கள் என்பதால் காவல்துறை அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

கடந்த தினங்களுக்கு முன்னர் இருந்தே பொதுமக்கள் தீபாவளிக்காக தயாராகி வந்தனர். இதனால் கடைவீதிகளில் கடந்த 4 நாள்களாக கூட்டம் அலைமோதியது. ஏராளமான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊரில் தீபாவளியை கொண்டாட திட்டமிட்டதால் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் மக்கள் ஆர்வடமுன் எதிர்பார்த்த தீபாவளி உற்சாகமாக பிறந்துவிட்டதால், இனி வாழ்க்கையில் எல்லாம் நலமே என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் தீபாவளியை உற்சாசகமாக கொண்டாடி வருகின்றனர்.