தமிழ்நாடு

திமுகவில் விரைவில் மாவட்டச் செயலாளர் தேர்தல்.. உயர்கிறதா துணைப் பொதுச் செயலாளர் பதவிகள்?

திமுகவில் விரைவில் மாவட்டச் செயலாளர் தேர்தல்.. உயர்கிறதா துணைப் பொதுச் செயலாளர் பதவிகள்?

webteam

திமுக மாவட்ட செயலாளர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 22 ஆம் தேதி முதல் மாவட்ட வாரியாக மனுத்தாக்கல் செய்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15 வது தேர்தல் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் மாவட்ட அவைத் தலைவர், மாவட்ட செயலாளர், துணை செயலாளர், மாவட்ட பொருளாளர் மற்றும் தலைமைக் கழகத்தால் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள்,பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிடுவோர் அதற்கென உள்ள படிவத்தில் முறைப்படி பூர்த்தி செய்து பொறுப்பு ஒன்றுக்கு 25 ஆயிரம் கட்டணமாக வரும் 22 ம் தேதி முதல் தலைமைக் கழகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் “வேட்பு மனு விண்ணப்ப வடிவம் ஒன்றுக்கு 1000 ரூபாய் செலுத்தி தலைமைக் கழகத்தில் பெற்றுக் கொள்ளலாம்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், மதுரை தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் திமுக மாவட்ட செயலாளர்களின் சட்டமன்ற தொகுதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே திமுகவின் கழக அமைப்பு ரீதியிலான அனைத்து இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட பொது தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாவட்டச் செயலாளர் தேர்தல் முடிந்தவுடன் கூடவுள்ள திமுக பொதுக்குழுவில், துணைப் பொதுச்செயலாளர்கள் எண்ணிக்கையை உயர்த்தி அறிவிக்கவும் திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.