தமிழ்நாடு

7 மாவட்டங்களில் பாஜக பிரிவுகள், அணிகள் கலைப்பு - தமிழக பாஜக அதிரடி முடிவு

7 மாவட்டங்களில் பாஜக பிரிவுகள், அணிகள் கலைப்பு - தமிழக பாஜக அதிரடி முடிவு

சங்கீதா

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் பாஜக அணிகள், பிரிவுகள் அனைத்தும் கலைக்கப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக, மாநகராட்சிகளில் 22 இடங்களிலும், நகராட்சியில் 56 இடங்களிலும், பேரூராட்சியில் 230 இடங்களிலும் என மொத்தமாக 308 இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில், சீரமைப்பு நடவடிக்கையாக, சென்னை உள்பட 7 மாவட்டங்களில் பாஜக அணிகள், பிரிவுகள் அனைத்தும் கலைக்கப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அதன்படி, நெல்லை, நாகை, சென்னை மேற்கு, வட சென்னை மேற்கு, கோவை நகர் மாவட்டங்களிலும், புதுக்கோட்டை, ஈரோடு வடக்கு, திருவண்ணாமலை வடக்கு மாவட்டங்களிலும் பாஜக அணிகள் கலைக்கப்பட்டுள்ளது. இந்த 7 மாவட்டங்களிலும் தலைவர், நிர்வாகிகள், அணிகள், பிரிவுகள், மண்டல் கமிட்டிகள் என அனைத்தும் கலைக்கப்படுகிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படும் வரை தற்காலிகமாக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்றும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.